வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு: சின்மயியை ஆதரித்த நடனக் கலைஞருக்கு நேர்ந்த கதி

கவிஞர் வைரமுத்து தொடங்கி கர்நாடக இசைக்கலைஞர்கள் சிலர் மீது பாலியல் புகார் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த விவகாரத்தை வெளியிட்டவர்களை ஆதரித்த நடனக்கலைஞர் சுவர்ணமால்யா எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

கோவையில் உள்ள சாகித்ய அகாடமி நடத்தும் நடன நிகழ்ச்சியில் இருந்து சுவர்ணமால்யாவை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கோவையில் சாகித்ய அகாடமி நடத்தவிருந்த நடன நிகழ்ச்சியில் இருந்தே சுவர்ணமால்யா நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக கலைஞர் ஒருவர் சாகித்ய அகாடமி நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து தாமாகவே விலகியுள்ளார்.

இதுவரை தம்மை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியது தொடர்பில் எந்த விளக்கமும் சாகித்ய அகாடமி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும், மீடூ விவகாரத்தில் தாம் ஆதரவு தெரிவித்ததே காரணமாக இருக்கலாம் எனவும் சுவர்ணமால்யா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு பின்னால் நடிகர் ராதாரவி இருப்பதாகவும் தகவல் பரவியது.

ராதாரவி தம்மை மிரட்டியதாகவும், பாடகி சின்மயி ஆதாரங்களுடன் வெளியிட்டார். அந்த வரிசையில் தற்போது நடனக் கலைஞர் சுவர்ணமால்யா.