பாதுகாப்புத்துறை அமைச்சரையே பதற வைத்த கேள்வி! ஆவேசமான அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து குதர்க்கமான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு பாதுகாப்பு அமைச்சர் நிரமலா சீதாராமன் காட்டமான பதிலை கொடுத்தார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து அங்கு ஆளும் கட்சியான பாஜக முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அமைச்சர்கள் என முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர், “எல்லையில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து மத்திய அரசு தம்பட்டம் அடிப்பது ஏன்? அது ராணுவ வீரர்களின் துணிச்சலை கூறவா? அல்லது காங்கிரஸ் ஆட்சியில் அப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லையா?” என ஹிந்தியில் கேள்வியெழுப்பினார்.

அவர் தம்பட்டம் என்பதை இந்தியில் bin bajaye என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதனால் ஆவேசம் அடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “எனக்கு இந்தி தெரியும். உங்களது குதர்க்கமான கேள்வி என்னை வருத்தமடைய செய்வதாக உள்ளது என கூறியுள்ளார்.

ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். நாம் ராணுவ வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும். இதில் அவமானமாக கருத ஏதுமில்லை இதன் மூலம் எதிரிகளை வீழ்த்த்தியுள்ளோம். தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை பெருமைப்படுத்த வேண்டும்.

அதே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது தேசத்தின் பெருமித அடையாளம் என சுய விளம்பரம் செய்திருப்பார்கள்” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனை மற்ற பத்திரிகையாளர்கள் சமாதானப்படுத்தினார்கள்.