ஜாமீனில் வந்த போதும் கைவரிசையை காட்டியவர் கைது!

கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த போதும் திருடிய மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காட்பாடி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது 80க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் தர்மபுரி என பல காவல் நிலையங்கலில் இவர் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன. இவர் காவல்துறையின் கையில் பிடிபடாமல் தப்பி வந்தார்.

கடந்த மாதம் இவர் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது மூன்று குண்டர் சட்டம் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு இந்த மாதம் 3ஆம் தேதி ஜாமீன் அளிக்கப்பட்டது. அதனால் இவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்தும் மணிகண்டன் திருடுவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

அதற்குப் பிறகும் 6 இடங்களில் கொள்ளை அடித்துள்ளார். இவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். தேடுதல் வேட்டையில் உள்ள போதும் மணிகண்டன் திண்டுக்கல்லில் ஒரு வீட்டில் திருடி உள்ளார். அதன் பிறகு ஆந்திரா மற்றும் கேரளா சென்றுள்ளார்.

மணிகண்டன் கேரளாவில் இருந்து கோவை வழியாக மீண்டும் தமிழ்நாடு வருவதாக தகவல் அறிந்த காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்துள்ளனர். மணிகண்டன் பயனம் செய்த காரில் பூட்டை உடைப்பதற்கான இரும்பு ராடுகள், மொபைல்கள், வரை நகைகள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவைகளுடன் ரொக்கப் பணமும் கிடைத்துள்ளது.
தற்போது பெருந்துறை காவல் நிலையத்தில் மணிகண்டனிடம் விசாரணை நடந்து வருகிறது.