பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். ஏற்கனவே அவர் விஐபி2 உள்ளிட்ட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் ஹீரோயினாக அறிமுகமானது பியார் பிரேமா காதல் படத்தில் தான்.
யுவன் தயாரித்த அந்த படத்தில் அவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரைசா-ஹரிஷ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இருவரும் ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது “ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?” என ஸ்ருதி கேள்வி கேட்க “அவர் சிங்கிள் தான்” என ஹரிஷ் பதில் அளித்தார்.
“ரைசா என்னிடம் வந்து கூச்சமே இல்லாமல் ‘எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என கேட்டார்” என உண்மையை போட்டுடைத்தார் ஹரிஷ் கல்யாண்.
நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்..
Join @iamharishkalyan and @raizawilson as they share about their extraordinary journey of friendship, this Sunday at 1 PM on #HelloSago presented by @shrutihaasan #SunTV pic.twitter.com/1U6Tf31Khy
— Sun TV (@SunTV) November 23, 2018






