யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கஸ்தூரியார் வீதியில் நடந்து சென்ற குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார்சைக்கிளுடன் மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.மூவரும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது சிகிச்சை பயனின்றி அந்த பெண் உயிரிழந்துள்ளார். எனினும், மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில், விபத்து தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.