லண்டனின் தென்மேற்குப்பகுதியில் உள்ள பேருந்துச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தை அடுத்து எழுந்த பெருந்தீயில் ஏழு பேருந்துகள் முற்றாக அழிக்கப்பட்டன.
மேலும் நான்கு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்தச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
இன்று அதிகாலை 3.30மணியளவில் ஓர்பிங்ரன் பகுதியில் இருந்த பேருந்துச்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரும்வெடியோசைகளுடன் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் சுற்றாடலில் வசித்தமக்கள் அச்சத்துடன் தமது தூக்கத்தில் இருந்து விழித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைத்த தீயணைப்புபடையினர் ஏறக்குறைய 3 மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர், தீ மேலும்பரவாமல் தடுப்பதற்காக மேற்படி சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 30 க்கு மேற்பட்ட பேருந்துகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்
தீயால் அழிவடைந்த பேருந்துகளை அகற்றும் பணிகளுக்காக தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் அந்தப்பகுதியில் நிலைகொண்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு தீவிபத்துச் சம்பவத்தை தாம் பார்த்ததில்லை என கூறும் அயலவர்கள் அப் பகுதியை அதிகாலையில் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது என அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.