சபரிமலைக்கு சென்ற தமிழக எம்பியை தடுத்து நிறுத்திய கேரள போலீஸ்! திடீர் பரபரப்பு!

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார்.

கேரளா சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய இத்தனை வருடங்களாக உள்ள தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு தமிழகம் மற்றும் கேரளா மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத வழிப்பாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், ஆக விதிப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்றும் மக்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் வருகை தொடங்கியது. ஒரு சில பெண்கள் வேண்டுமென்றே கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைப்போல தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என 19 மறு ஆய்வு மனுக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தெரிவித்ததாவது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது. மறு சீராய்வு மனுக்களை ஏற்றுக்கொள்கிறோம். மனுக்களை ஏற்றுக்கொண்டது விசாரித்தாலும் முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் கிடையாது. மேலும் இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதியில் இருந்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி, நாகர்கோயில் இருந்து சபரிமலைக்கு சென்றார். பம்பை நோக்கி சென்ற அவரை, கேரளா காவல்துறை தடுத்து நிறுத்தியது. அதிகப்படியான வண்டிகளில் சென்றதால் போலீஸ் தடை விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.