தலை முடியில் உள்ள எண்ணெய் பசையை அகற்ற எளிய வழிமுறை..!!

தலை முழுவதும் இருக்கும் எண்ணெய் பசையை நினைத்து., தினமும் மன அழுத்தத்திற்கு ஆளாகி தலையை பிய்த்து, தேவையற்ற சாம்பு மற்றும் சோப்புகளை தலைக்கு போட்டு உடலில் தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்த வேண்டாம்.

தலையில் இருக்கும் எண்ணெய் அழுக்குகளை நீக்குவதற்கு இயற்கை முறையில் நல்ல தீர்வு வழிமுறை இருக்கிறது. அதன் படி., சோற்று கற்றாழை என்று அழைக்கப்படும் கற்றாழையை உபயோகிப்பதன் மூலமாக நல்ல பலனை அடைய முடியும்.

தேவையான பொருட்கள்:

வெட்டி எடுக்கப்பட்ட கற்றாழை – 2 அல்லது 3 எண்ணம் (தேவைக்கேற்ப).,

எலுமிச்சை பழத்தின் சாறு – 3 ஸ்பூன் அளவிற்கு.

செய்முறை:

வெட்டி எடுக்கப்பட்ட கற்றாழையை நடுப்புறமாக கிழித்து., அதில் உள்ள ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரவை இயந்திரத்தில் எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்றாக கலக்கும் படி அடித்துக்கொள்ளவும்.

தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் தேய்த்து., சுமார் 30 மணித்துளிகள் ஊறவிட்டு பின்னர் சீயக்காயின் உதவியுடன் வாரத்திற்கு 2 முறை குளித்து வர எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் முற்றிலும் காணாமல் போய்விடும்.