இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாழ்த்து தெரிவித்த ஆஸி. வீரர்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இதனால் இந்தியா ரசிகர்களிடையே மிகுந்த ஏதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணியில் பலம் வாய்ந்த வீர்கள் இல்லாததால் அந்த அணி தடுமாறி ஆடிவருகிறது. இதனால் இந்திய ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி இந்திய அணி வெற்றி பெற சில டிப்ஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் “ஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சில முக்கிய வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு பெர்ம் பின்னடைவாக உள்ளது. அதனில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான அணி என்று கூறமுடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஆஸ்திரேலிய அணி வலிமை குறைந்த அணியாக இருப்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை வம்பிழுக்கமால் இருப்பார்கள்.

தற்போது டெஸ்ட் ஆதிக்கத்தில் இந்திய அணி மிக சிறந்த அணியாக உள்ளது. சில டெஸ்ட் தொடர்களை இழந்தாலும் அந்த அணி இன்னும் நம்பர் 1 இடத்தை இழக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே நம்பர் 1 அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இது ஒரு சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினார்.