ஆட்டம் போட்ட நியூசிலாந்து வீரர்கள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணி வீரர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 176 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அறிமுக வீரரான அஜாஸ் பட்டேல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இவரைப் போல ஜீத் ராவல், இஷ் சோதி ஆகிய இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இவர்கள், ஹிந்தி பாப் பாடல் ஒன்றுக்கு பாங்ரா நடனம் ஆடினர்.

இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.