நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான சர்கார், பல விமர்சனங்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலை வாரி குவித்து சாதனைப் படைத்து வருகிறது.
இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சர்கார் பட பேனர்களையும் கிழித்தனர்.
இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது முகநூல் பக்கத்தில் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “முன்பெல்லாம் படத்தில் வில்லன்கள்தான் தன்னை ரவுடி, கிரிமினல் என்று சொல்லி கொள்வார்கள். ஆனால் சர்கார் படத்தில் விஜய் தன்னை தானே கார்பரேட் கிரிமினல் சொல்லியுள்ளார். பல கோடி ரூபாய் சம்பளம் மற்றும் படம் எடுத்து விட்டு இலவசம் வேண்டாம் என இயக்குனர் முருகதாஸ் சொல்வது அவரை சமூக விரோதி என்றுதான் கூற வேண்டும் என்றார்.
மேலும் அவர் ” அஜித், துப்பாக்கி போன்ற ஜாலியான பொழுதுபோக்கு படங்களில் நடிக்காமல், விவேகம் மாதிரி படங்களில் நடித்தாலும் அவர் மிக சிறந்த மனிதர். மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி திரைப்படம் மூலம் அரசியலுக்கு வந்து விடலாம் என்று நினைப்பது தவறு, படங்களில் டாக்டர், என்ஜினீயர் போன்ற துறைகளில் நடிப்பதை மற்ற நடிகர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுளளார்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் “மக்களை கஷ்டம் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் மற்றும் அரசியல் பற்றி தெரியாதவர்கள் என எவரும் சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம்” என நினைப்பதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.






