பௌத்த தேரர்கள் மீது தாக்குதல்! ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை??

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பௌத்த தேரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஜனாதிபதி தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட தேரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.