பேஸ்புக் ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை! அதிரடியாக அறிவித்த நிறுவனர்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை அந்நிறுவனம் அளித்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பிரச்சனையின் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை அழைத்து விசாரணை நடத்தியது. இதனால் பேஸ்புக் நிறுவனம், சுமார் 40 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆப்பிள் சி.இ.ஓ., டிம் குக், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர் தனிநபர் வாழ்வில் யாரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்று கூறினார்.

இதனையடுத்து, டிம் குக் இவ்வாறு பொதுவெளியில் கருத்து தெரிவித்ததால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மிகுந்த கோபம் கொண்டார்.

இதன் காரணமாக மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவனத்தில் ஊழியர்களிடம் ஆப்பிள் நிறுவன ஐபோன்களை யாரும் பயன்படுத்த கூடாது. அதற்கு பதிலாக ஊழியர்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.