கனடாவில் வாகன விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஹலிபக்ஸ் நகரை சேர்ந்த 63 வயதான முதியவர் மினிவேன் வாகனத்தை சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது எதிரில் வந்த டிரக் வாகனம் ஒன்றின் மீது மினிவேன் வேகமாக மோதியது. இதில் மினிவேனை இயக்கிய முதியவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. எதிரில் வந்த டிரக் வாகனத்தை இயக்கிய ஓட்டுனருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






