முதியோர் விடுதியில் தங்கியிருந்த வயோதிபப் பெண்ணொருவர் அதே விடுதியில் தங்கியிருந்த நடுத்தர வயதான நபரைக் காதலித்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விடுதியை விட்டு ஓடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேற்கு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுகாதார திணைக்களத்துடன் இணைந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த குறித்த வயோதிபப்பெண் இராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்திருந்தார்.
யுத்தத்தின்போது அந்த பெண்ணின் கணவர் காணாமல் போன பிறகு அவரிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் அவரது குடும்பத்தினர் கையகப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்ட குறித்த வயோதிபப் பெண் விடுதிக்கு வந்துள்ளார்.
அதன் பின்னர், மனைவி வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை என்ற காரணத்தினாலும் ஒரே மகனுடன் ஏற்பட்ட சண்டையினாலும் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நடுத்தர வயது நபர் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்துள்ளார்.
வெகுவிரைவில் அவர்கள் இருவருக்கும் இடையில் உறவு இருப்பதை அறிந்த விடுதியிலுள்ள ஏனையவர்கள் அது பற்றி விடுதி நிர்வாகியிடம் தெரிவித்துள்ளனர். எனினும் அதை அவர் நம்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த இருவரும் சமீபத்தில் அலுவலக நிர்வாகிகளிடம் சென்று தங்கள் இருவரும் ஒரே அறையில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையைக் கேட்ட நிர்வாகி கோபத்துடன் விடுதி நிர்வாகக்குழுவிடம் குறித்த இருவரையும் உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு அறிவித்துள்ளார்.
எனினும், அதே இரவு குறித்த இருவரும் அந்த விடுதி விடுதி இருந்து அனைத்து உடமைகளைளயும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






