இணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ….

சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் வில்லன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.

தற்போது வில்லன் அக்‌ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.