கஜா புயலின் கோரத்தாண்டவம்! தனித்தீவாக மாறிய நகரம்- கதறும் மக்களின் வீடியோ காட்சிகள்

தமிழகத்தில் கஜா புயல் காரணமாக வேதாரண்யம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அப்பகுதி தற்போது தனித்தீவாக மாறி காட்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு கரையை கடக்க துவங்கிய கஜா புயல் தமிழகத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அதில் வேதாரண்யம் அடங்கும். தற்போது வேதாரண்யம் பார்ப்பதற்கு ஒரு தனித்தீவு போன்று காட்சியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதாரண்யம் பகுதிக்கு விரைந்து சென்று அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி கடும் பாதிப்பை சந்தித்துள்ள வேதாரண்யம் பகுதியின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பழங்கள்ளி மேடு என்று சொல்லக்கூடிய, வேதாரண்யத்தின் சுமார் 30 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் அந்த பகுதிக்கு செல்ல 6 மணி நேரம் ஆகிறதாம்,

மிகக்கடுமையான அளவில் வேதாரண்யம் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மின்கம்பிகள் அறுந்து கிழே விழுந்து கிடக்கின்றன. கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால், வீடுகளை இழந்து மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

உடனடியாக தங்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்தாலும், மரங்கள் சாய்ந்திருப்பதால் நாகையிலிருந்து வரும் பாதைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையில் இருக்கும் மரங்களை அகற்றினால் மட்டுமே மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இன்று மாலைக்குள் சரிசெய்யப்பட்டு வேதாரண்யம் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.