வடகொரிய மக்களுக்கு இருக்கும் சட்டங்களைவிடவும், கிம் ஜாங் உன்னின் மனைவி பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகிறது.
உலக அரசியலில் திடீர் கவனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்.
அடுத்தடுத்து அணுஆயுத சோதனை, வல்லரசு நாடுகளுக்கு மிரட்டல், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் என அதிர்வலைகளை ஏற்படுத்திய வடகொரியா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
ஆனால் திடீரென்று அவை அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு சீனாவுடன் நட்புறவு, அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு, தென் கொரியாவுக்கு பயணம் என மீண்டும் அதிர்வலைகளை எழுப்பினார் கிம் ஜாங் உன்.
ஆனால் இன்னமும் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அங்குள்ள மக்களுக்கு இருக்கும் சட்டங்களைவிடவும், அவருக்கும் அவரது மனைவிக்கும் பல கடினமான சட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங்-உன் மனைவி மட்டுமல்ல, இந்த ஒரு சட்டத்தை வடகொரிய நாட்டு மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 16 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களில் யாரும் திருமணம் செய்யக் கூடாது.
இந்த திகதிகள் கிம் ஜாங்-உன் தாத்தா மற்றும் தந்தையின் பிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக கடைபிடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுவது உலக நாடுகளில் காணப்படும் வழக்கம். கிம்மின் மனைவியான ரி சோல் ஜூ தனது மொத்த பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இது வடகொரிய அரசு சட்டத்தின் படி இவரது பழைய வாழ்க்கையை முற்றிலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
கிம் ஜோங்-உன் மனைவியால் தனது பெற்றோரை மிக எளிதாக எல்லாம் பார்த்துவிட முடியாது. தனது கணவருடன் அவர் நேரம் செலவழிக்க, பயணங்கள் மேற்கொள்ளவே நேரம் போதுமானதாக இருக்கும்.
இதற்கு நடுவே பெற்றோரை காண்பது என்பது இன்றியமையாத காரியம். மேலும், இவரது பெற்றோர் குறித்த தகவல்களும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தின் பயணம் மற்றும் செயற்பாடுகளில் ரகசியம் பேணப்படுகிறது.
வல்லரசு நாடுகளுடன் வடகொரியா இணக்கமாக இல்லை என்பதால், அவர்களால் ஏதேனும் அச்சுறுத்தல் நேரலாம் என்பதாலையே இந்த ஏற்பாடு.






