காணாமல் போன மகள், கடத்தி சென்று இளைஞன் செய்த கேவலமான செயல்.!

இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து , பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கே.மோரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேஷன். இவரது மனைவி விஜயலட்சுமி . இவர்களது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு கணேசனின் மகள் காணாமல் போய் உள்ளார். மேலும் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கணேசன் தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது இளம்பெண்ணை அதே பகுதியில் வசித்து வந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விஜய் என்ற இளைஞர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தப்பித்து வீட்டிற்கு வந்த மாணவி நேற்று காவல்நிலையத்திற்கு சென்று விஜய் தன்னை கடத்திச் சென்று தாலிக்கட்டியதாகவும், ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் தாரமங்கலத்தில் பதுங்கியிருந்த விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.