திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சமுத்திரப்பட்டியை சார்ந்தவர் முகமது சலீம் (30). இவர் சரக்கு வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தினமும் பணி முடிந்தவுடன் தனது இல்லத்திற்கு முன்னதாக வாகனத்தை நிறுத்தி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று இவரது பணி நிறைவு பெற்றவுடன் தனது சரக்கு வாகனத்தை இல்லத்தின் முன்புறமாக நிறுத்திவைத்துள்ளார். இந்த விசயத்தை நோட்டமிட்ட மர்ம நபர் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆள்நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த அவர்., வாகனத்தை கள்ளச்சாவி போட்டு எடுத்து சென்றுள்ளார். இரவில் வெளியே வந்து பார்த்த சலீம் வாகனம் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்., சோதனை சாவடிக்கும் தகவலை தெரிவித்தனர்.
அப்போது திண்டுக்கல் நத்தம் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது அந்த வாகனமானது பிடிபட்டது. அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






