பணத்துக்காக 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்ய அனுமதி கொடுத்த தாய்!

இந்தியாவில் 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த நபரிடம் இருந்து பணம் பெற்று கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அனிதா (45). இவர் தனது 15 வயது மகளை கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டி சென்றுள்ளார்.

பின்னர் அஜய் என்பவருடன் தனது மகளை சந்திக்க் வைத்துள்ளார். இதையடுத்து அஜய் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்ற நிலையில் அங்கு மூன்று பேர் இருந்துள்ளனர்.

பின்னர் நால்வரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் சிறுமி வீட்டுக்கு வந்த அஜய் அவர் தாயிடம் ரூ.1000 கொடுத்துள்ளார்.

இதையெல்லாம் தனது உறவுக்கார பெண்ணிடம் சிறுமி கூறிய நிலையில் இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டருகில் உள்ள தில்பவ் சிங் என்பவரும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார்.

இதையடுத்து சிறுமியின் தாய் அனிதா, அஜய், தில்பவ் ஆகிய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அஜயுடன் இருந்த மூன்று பேரை விரைவில் கைது செய்வோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.