ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல்! நிலைகுலைந்து போன மசூதி….

கஜா புயல் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடியதால், மசூதி, தேவாலயம் போன்றவைகள் இடிந்து கிடக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

கஜா புயல் தமிழகம் மற்றும் பாண்டிச் சேரியில் ருத்ரதாண்டம் ஆடிச் சென்றது. இதனால் இருமாநிலங்களில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 100 கி.மீற்றர் வேகத்தில் காற்றி வீசி வருகிறது.

இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கம் குறைந்தவுடன் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருக்கும் தேவலாயமும் இதில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ஏசுகிறிஸ்துவின் சிலையும் சேதமடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பட்டுக் கோட்டை பகுதியில் இருக்கும் மசூதியும் இடிந்துள்ளது. அங்கு இருக்கும் போன் டவர்கள் போன்றவை நிலைகுலைந்து கீழே விழுந்து கிடப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இப்படி தமிழகத்தை உலுக்கிச் சென்ற கஜா புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.