பேரன்., பேத்தி வந்த வயதில் அண்ணிக்கு அழைப்பு விடுப்பு.!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியாம்பாளையத்தை சார்ந்தவர் முருகன். இவரது மனைவியின் பெயர் முத்துலட்சுமி (45). கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனதால்., இது குறித்த விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலத்தில் பெண்ணின் பிணம் சாக்குமூட்டையில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் செய்த சோதனையில் பெண்ணின் பிணம் கண்டறியப்பட்டது. இது குறித்த விசாரணையையும் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

அந்த வகையில் அந்த பெண்ணின் தாலியில் பி.ஜே என்கிற எழுத்து பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட காவல் துறையினர் தங்க ஆபரண கடைகளில் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அப்போது ஒரு நகைக்கடை உரிமையாளர் அந்த தாலி தனது கடையில் செய்யப்பட்டது என்று தெரிவிக்கவே., அந்த பகுதிகளில் மாயமான பெண்களின் தகவலை காவல் துறையினர் சேகரித்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் கொலையாளிகளை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது., இந்த கொலையை செய்ததாக தாராபுரம் கிராம நிர்வாக அலுவலகரின் அலுவலகத்தில் முத்துலட்சுமியின் தங்கையின் கணவர் வேலுசாமி (வயது 45) மற்றும் அவரது அக்காமகன் குமரேசன் (வயது 21) என்பவர்கள் சரணடைந்தனர். இந்த தகவலை காவல் துறையினருக்கு தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாவது., குடும்பத்துடன் கவுந்தம்பாடியில் வசித்து எங்களுடன் எனது மனைவியின் அக்கா முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் உடன் வசித்தனர். எனக்கும் முத்துலெட்சுமிக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பானது இருந்து வந்த நிலையில்., இருவரும் இல்லத்தில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளோம்.

அந்த வகையில் சம்பவத்தன்று உல்லாசத்திற்கு அழைப்பு விடுத்தேன்., அதற்கு முத்துலட்சுமி பேரன்., பேத்திகள் வந்துவிட்ட நிலையில் இனி உல்லாசத்திற்கு வர இயலாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான் எந்தது அக்காமகன் குமரேசனின் உதவியுடன் வேனில் கடத்தினேன். வேனில் செல்லும் போது உல்லாசம் குறித்து பேசத்தொடங்கிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்குமூட்டையில் போட்டு பாலத்திற்கடியில் வீசினோம். மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு எங்களை நெருங்கியதை அறிந்ததால் சரணடைந்தோம் என்று அவர்களின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.