மருமகள் சொன்ன வார்த்தை..கொலை செய்து வீட்டில் புதைத்த மாமனார்-மாமியார்!

பிரேசிலில் மருமகளை மாமியர் மற்றும் மாமனார் சேர்ந்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரேசிலின் Sao Paulo நகரத்தில் இருக்கும் Rio Pequeno பகுதியைச் சேர்ந்தவர் Marcia Martins Miranda(44). சமூகசேவையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கடந்த மாதம் காணமல் போயுள்ளார்.

இதனால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, Marcia Martins Miranda கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார் எனவும், இந்த கொலையை அவரின் மாமியார் Maria Izilda Pereira Miranda(60) மற்றும் மாமனார் Fernando Antonio Martins de Oliveira(62) செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட Mario Sergio de Oliveira Pinto என்பவர் கூறுகையில், Marcia Martins Miranda-வை அவரது மாமனார் மற்றும் மாமியார் காரில் புதிததாக வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற போது வீட்டின் பின்னால் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று, Marcia Martins Miranda-வின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அதன் பின் அவரை கொலை செய்து, ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி அதே வீட்டில் தொண்டி புதைத்து அதன் மீது கான்கீரிட்டால் பூசியுள்ளனர்.

ஏனெனில் Marcia Martins Miranda-வுக்கும் அவரது கணவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தான் தனியாக இருக்கப்போவதாகவும், என் இரண்டு குழந்தைகளையும் என்னுடன் அழைத்துச் சென்றுவிடுவேன் என்றும் Marcia Martins Miranda தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார்.

இவர்களுக்கு பேரக்குழந்தைகள் மீது அதிக பாசம் என்பதால், தனியாக சென்றுவிட்டால் எங்கு பேரக்குழந்தைகளை பார்க்க முடியாதோ என்ற எண்ணத்தில் இந்த கொலையை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் Marcia Martins Miranda-வின் கணவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.