தாய்ப்பால் குடித்தபோது 18 மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் வசித்து வருபவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த செலஸ்டின்க்கு 18 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், செலஸ்டின் பசியில் அழுத்த தனது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தையை தூக்கியபோது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், பால் குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






