மஞ்சள் தமிழர்களின் அனைத்து சுப காரியங்களிற்கும் முக்கியமான விடயமாகும்.இம் மஞ்சளில் அதிகப்படியான நன்மைகள் உண்டு.
மஞ்சளில் ஏராளமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் நமது உணவில் கூட மஞ்சள் எப்போதும் இடம் பெறுகிறது.
மஞ்சளில் ஏராளமான வகைகள் உள்ளன. அதில் கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு
மஞ்சள் தூளை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய சில நிமிடங்களில் தலைவலி குறையும். மேலும் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும்.
மஞ்சளுடன் பாசிப்பயறு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும். தோல் மென்மை ஆகும். முகப்பருக்கள் வியர்வைக் கட்டிகள் மறையும்.
மஞ்சள் தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்னையும் சரியாகும்.
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.
வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும். விரல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் போட்டால் குணம் உண்டாகும்.