நடிகர் அஜித்தின் அடுத்த படம் உறுதியானது!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம் ” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார். இப்படம் இறுதிக்கட்ட பணிகள் நடத்துக்கொண்டுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார் என ரசிகர் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் இன்று அஜித்தை போனி கபூர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு போனிகபூரின் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ரசிகர்கள் வெளியீட்டியுள்ளனர்.