அரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை! குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்!!

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த வந்த போது, அதே ஊரை சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு கொடுரரை மனித மிருகங்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு பேரில் சதீஷ் (வயது 22) இறுதினங்களுக்கு முன் ஏற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் அளித்த வாக்குமுள்ளதில், ”எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவது வழக்கம்.

தீபாவளி விடுமுறைக்கு மாணவி ஊருக்கு வந்து இருந்தார். அப்போது அவரை சந்தித்த பொது, அவரை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அப்போது இதனை பார்த்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை வரும் 19 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை காவலில் வைத்து விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர்.