கிண்ணியா பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து கடலில் மூழ்கிய நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்று பிற்பகல் சக நண்பர்களுடன் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, தவறுதலாக அவரது பாதணி விழுந்துள்ளதையடுத்து பாதணியை எடுக்கச் சென்ற போது கடலில் விழுந்து மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதுடைய ஹாரி முஹீத் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரால் இளைஞனின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.