புதிய அவதாரம் எடுக்கும் நாமல்ஷ….!!

தற்போது இலங்கை பொதுத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது. இதில் மைத்திரி – மஹிந்தவின் புதிய கூட்டணிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.

அந்த வகையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ போட்டியிடவுள்ளார்.அதற்காக நாமல் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, பொதுஜன பெரமுனவில் உடனடியாக இணையவுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது..

‘நான் உடனடியாக பொதுஜன பெரமுனவில் இணைய உள்ளேன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் ஒரு கூட்டணியை உருவாக்க நாங்கள் முயற்சிப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.