தனிமையில் இருந்த காதல் ஜோடிகள்!. 5 இளைஞர்கள் செய்த வெறிச்செயல்!.

தஞ்சாவூர் அருகே கும்பகோணத்தில் திருப்பனந்தாள் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற இளம்பெண்ணும் கும்பகோணத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளனர்.

குருமூர்த்தியும் , ராஜலட்சுமியும் காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதல் விஷயம் அறிந்த கடையின் முதலாளி குருமூர்த்தியை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். மேலும் வேலையை விட்டு நின்ற குருமூர்த்தி தொடர்ந்து ராஜலட்சுமியை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்துவந்த ராஜலட்சுமியை பூங்காவுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார் குருமூர்த்தி. அப்போது திடீரென அங்கு வந்த 5 இளைஞர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.