சர்காரை தூக்கி வீசும் திரையரங்குகள் – அதிரடியாக வெளியாகியுள்ள அடுத்த படம்..?

அதிமுக – விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் சர்கார் படம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு தரமான திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

இந்தப் படம் சுமார் 3000 திரையங்குகளில் வெளியானது. இதனால் முதல் நாள் மற்றும் இரண்டாவது நாள் வசூலில் சாதனை படைத்தது.

வசூல் சாதனை ஒருபுறமிருக்க அதிமுக ஆட்சிக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றதால் சர்கார்க்கு எதிரான சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது.

அரசின் இலவச பொருட்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கக் கோரி அதிமுகவினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது வருகின்றனர்.

இந்த நிலையில் சர்கார் படத்துடன் வெளியான பில்லா பாண்டி படத்திற்கு முதலில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

தற்போது சர்கார் படத்தின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதால், சர்கார் படத்தை எடுத்து விட்டு பில்லா பாண்டி திரைப்படத்தை திரையிட 29 திரையரங்குகள் முன்வந்துள்ளன.

இதற்கு, நீங்கள் என்ன இலவச பொருளை தூக்கி எறிவது, நாங்கள் உங்கள் படத்தையே தூக்கி எறிகிறோம் என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.