பாஜகவை வீழ்த்த, ராகுல் காந்தியின் புதிய திட்டம்! அதிர்ச்சியில் பாஜக!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அனைத்தும் டிசம்பர் 15-க்குள் நடத்தப்படும் என் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தேர்தல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடந்தது வருகிறது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் இந்த நிலையில், இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 2 நாள் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கான்கேர் மாவட்டம் பகன்ஜோர் நகரில் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்றிருந்த தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியோட அனுமதித்ததையும், பாஜகவை வீழ்த்தும் ஆயுதமாக கையில் எடுத்து ராகுல் பேச தொடங்கினார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் எடுத்து நேற்றோடு 2 வருடம் ஆகிறது. பணமதிப்பிழப்பு நடவடிகையால் நீங்கள் அனைவரும் உங்கள் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு வங்கி வாசல்களில் நீண்டு இருந்த வரிசையில் காத்திருந்த போது, அங்கே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யாரையுமே பார்க்க முடியவில்லை. அதே சமயத்தில் நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் உங்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக வங்கிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தனர் என மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசினார்.

கான்கேர் மாவட்டம் பகன்ஜோர் நகரில் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். என்று ராகுல் காந்தி கூறினார். இதனால், பாஜகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.