திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் செய்த காரியம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). இவர் பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரசிகா வெளிநாடு செல்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் 30 பவுன் தங்க நகை ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளார்.

அவரை அக்கம், பக்கம் என பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

அவர் உண்மையிலே வெளிநாடு சென்றாரா? அல்லது தமிழ் நாட்டில் தான் இருக்கிறாரா? என்று காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.