தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை கவனமாக வெடிக்கக்கூறி எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினாலும் சில விபத்துகள் நம்மாலும்., பிறராலும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில்., உத்திரபிரேதேசம் மாநிலம் மீரட் நகரை அடுத்துள்ள கிராமம் மில்லக். இந்த கிராமத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சசிகுமாரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் வாய் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்தார். இதனால் அந்த சிறுவன் வலியால் அலறித்துடிக்கவே., அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு வாய் பகுதியில் சுமார் 50 தையல்கள் போட்டு., தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தையான சசிகுமார் அந்த பகுதியில் இருக்கும் வாலிபர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்., பட்டாசு வெடித்து கொண்டிருந்த மகனின்மகளின் வாயில் பட்டாசை வைத்து வெடித்துள்ளதாக ஹர்பால் என்ற வாலிபரின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொன்ற காவல்துறையினர் தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர். இந்த சமபவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.