இத்தாலி நாட்டில் கடந்த வாரமாக மிரட்டி வந்த புயலானது நேற்று கரையை கடந்தது. புயலானது கரையை கடக்கும் போது பலத்த சூறாவளி காற்றும் பேய் மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள வெனிடோ பகுதியானது பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.
மேலும் சிசிலி மற்றும் தெற்கு சர்டினியா பெரும் பாதிப்பிற்குள்ளான நிலையில்., அங்குள்ள ஆற்றின் கரையானது உடைந்து ஊருக்குள் வெள்ளமானது புகுந்தது. அந்த வெள்ளத்தில் 2 குடும்பத்தை சார்ந்த சுமார் 12 நபர்கள் பரிதாபமாக நீரில் முழ்ங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலியானவரின் குடும்பத்தில் இருந்த மூவர் அதிஷ்டவசமாக மரத்தில் ஏறி உயிர் தப்பினர். இந்த பெரு வெள்ளத்தால் 3 கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் வீசிய பலத்த காற்றால் 17 மரங்கள் வீடுகளின் மீது விழுந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 இலட்சத்து 500 ஆயிரம் ஏக்கர் பைன்ஆப்பிள் தோட்டங்கள் முற்றிலும் சிதைந்தது.
தற்போது புயலின் தாக்கமானது நிறைவடைந்து மீட்பு பணிகளில் அங்குள்ள காவல் அதிகாரிகளும்., மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.






