குளிர்பானத்தில் மயக்கமாத்திரை..!! இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன உரிமையாளர்.!!

சென்னையை அடுத்துள்ள சேலையூரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருவப்பவர் ராஜசுந்தர். இவர் படித்து முடித்து வேலையில்லாத நபர்களுக்கு பயிற்சி வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாங்கித்தரும் பணி செய்து வருகிறார்.

இவரின் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சிக்காக திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சேர்ந்துள்ளார். இவரின் பயிற்சி மையத்திலேயே வைத்து அந்த பெண்ணுக்குத் தேவையான பயிற்சியை வழங்கியுள்ளார்.

இந்நிலையில்., இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்ணை பயிற்சிக்கு வர சொல்லி அவர் அருந்துவதற்கு குளிர்பானம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த பெண்ணும் எந்த வித சந்தேகமும் இன்றி அந்த குளிர்பானத்தை அருந்திவிட்டு பின்னர் மயக்கமடைந்துள்ளார். மயக்கம் தெளிந்தவுடன் என்ன ஆனது என்று அந்த பெண் கேட்டதற்கு நீங்கள் மயக்கமடைந்துவிட்டீர்கள் வேறு ஒன்றும் இல்லை என்று கூறிஉள்ளார்.

இதனை கேட்ட அந்த பெண் எந்த விதமான சந்தேகமும் இன்றி தனது ஊரான திருச்சிக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்ட ராஜசுந்தர் உனது ஆபாச படம் என்னிடம் இருப்பதாகவும்., ரூ. 1 இலட்சம் தாராவிடில் படத்தை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் ஆதாரமாக அவன் சில வீடியோ காட்சிகளையும் அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளான்.

இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண்ணின் நடவடிக்கையை கண்ட பெண்ணின் சகோதரி பிரச்சனையை கேட்டறிந்துள்ளார். தனது சகோதரியிடம் அந்த பெண் தனக்கு நடந்த அவலங்களை கண்ணீருடன் தெரிவிக்கவே., உடனடியாக திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை காவல் ஆய்வாளரை சந்தித்துள்ளனர். சென்னை மாவட்ட கண்காணிப்பாளரிடம் தனது சகோதரிக்கு நடந்த பிரச்சனைகளை அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை கேட்ட காவல் ஆய்வாளர் உடனடியாக ராஜசுந்தரின் மீது வழக்கு பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., அந்த பெண் இவரிடம் பயிற்சி பெற்றுமுடித்துவிட்டு திருச்சிக்கு சென்றுவிட்டார். பின்னர் அந்த பெண்ணுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு வேலைவிசயமாக பேச வேண்டும் சென்னைக்கு வருமாறு தெரிவித்தேன்.

இதனை நம்பிய அந்த பெண் அலுவலகத்திற்கு வந்த போது., அந்த பெண்ணிடம் மயக்க மாத்திரை கலக்கப்பட்ட குளிர்பானத்தை கொடுத்த போது அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் குளிர்பானத்தை அருந்தி மயக்கமடைந்தார். பின்னர் அவரை எனது அலைபேசியில் ஆபாச புகைப்படம் எடுத்துவிட்டு அவருக்கு மயக்கம் தெளிந்தவுடன் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தேன்.

மயக்கம் தெளிந்தவுடன் என்ன ஆனது என்று அந்த பெண் கேட்டதற்கு தெரியவில்லை நீங்கள் மயக்கமடைந்துவிட்டீர்கள் என்று கூறினேன். இதனை அவரும் நம்பியதால் பின்னர் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் இல்லையென்றால் பணம் தரச்சொல்லி மிரட்டினேன் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்., ராஜசுந்தர் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர் மற்றும் தனது பேச்சாற்றலால் மூளைச்சலவை செய்யும் ஆற்றலும் உடையவர். எப்பொழுதும் பெரிய அதிகாரியைப்போலவே ஆடைகளை அணிந்திருப்பார். தனியார் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலைவாங்கித்தருவதாக பயிற்சியும் அளித்துள்ளார் என்று கூறினார்.

ராஜசுந்தரின் மீது வழக்குப்பதிவு செய்த கவலை துறையினர் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.