பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தால் 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்வோம் என காங்கிரஸ் பெண் தலைவருக்கு பாஜக பிரமுகர்கள் மிரட்டல் விடுத்துள்ளது.
கோவாவின், காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுபாஷ் சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.
அவர் என்னிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் பேசினார். பின்னர் சிரோத்காரின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என்று மர்ம நபர் தெரிவித்தார் என்று தியா ஷேத்கர் புகார் அளித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் சிரோத்கார் பாஜகவில் இணைந்துள்ளார். தியாவின் புகாருக்கு சிரோத்கார் எந்த பதிலையும் அளிக்கவில்லை எனவே காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர் வருத்தத்தில் உள்ளார்.