சீனாவில் உள்ள பீஜிங் அதிவேக சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு கனரக வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கனரகவாகனமானது எதிர்[பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அந்த கனரக வாகனம் எதிர்புறசாலைக்கு சென்று எதிரில் வந்த வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்த பிரயாணிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அணிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் தற்போது வரை 14 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும்., சுமார் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்