தற்போதைய வாழ்கை முறையில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அலுவலகம், சினிமாத்துறை என்று போய்க்கொண்டிருந்த இந்த விவகாரம், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் அவல நிலை அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவருக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த தனியார் பள்ளியில் சென்னையை அருகே உள்ள மாங்காடு பகுதியில் இருந்து 17 வயது மாணவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய 40 வயது நிரம்பிய ஆசிரியை மாணவனிடம் பள்ளியில் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு நடந்தவற்றை அந்த மாணவர் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் இருந்து நீக்கியும் அந்த ஆசிரியையை அந்த மாணவனிடம் போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவனிடம் ஆபாசமாக பேசியதாக பெற்றோரிடம் கூறியுள்ளான் மாணவன். இதனையடுத்து போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.