கடலூர் மாவட்டம்., பண்ருட்டியை அடுத்துள்ள கட்டமுத்துபாளையத்தை சார்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவியின் பெயர் ஜெயசித்ரா (27). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சிலவருடங்கள் ஆகும் நிலையில்., மிதுன் என்ற 4 வயது மகனும்., லட்சன் என்ற 8 மாதத்திலான கைகுழந்தையும் உள்ளது.
இவர்களின் 8 மாத குழந்தையான லட்சன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த அண்டாவில் முழ்ங்கி இறந்தான். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜெயசித்ரா தலைமறைவானதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., குழந்தை அண்டாவில் மூழ்ங்கித்தான் இறந்தது என்று அவர் தெரிவித்ததால் காவல் துறையினர் அவரை விட்டனர்.
இந்த சோக சமபவத்திற்கு பின்னர் சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனங்குப்பத்தில் வசித்து வந்தனர். இவரின் மகன் மிதுன் அங்குள்ள தனியார் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில்., சிலம்பரசன் நேற்று பணிக்கு சென்றுவிட்ட நிலையில், தாயும் மகனும் வீட்டில் இருந்துள்ளனர். பணி முடித்து வீட்டிற்கு வந்த கணவன் தனது குழந்தை மற்றும் மனைவியை தேடினான்.
அப்போது மிதுன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தனது மனைவியும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடையவே., சம்பவம் குறித்து வளவனுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது இரண்டு குழந்தையையும்., எனது மனைவி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜெயசித்ராவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும் அவரின் அலைபேசி எண்ணை கேட்டறிந்த காவல் துறையினர் அவரின் அலைபேசி எண்ணில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.