திடீரென சிரித்துப் பாடல் பாடி வித்தியாசமான நோயால் பலியான சிறுமி….!!

பிரித்தானியாவில் சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் சாரா கூறும் போது; எனக்கு அலிசை சேர்ந்து 19, 12 மற்றும் 6 வயதில் 4 குழந்தைகள் உள்ளனர்.

அலைசா பிறந்தது முதலே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆட்டிசம், பார்வை குறைபாடு மற்றும் ஹைபரோமொபிலிட்டி நோய்கள் இருந்தது. இதனால் சிறிய குழந்தை போலவே எப்பொழுதும் விளையாடி கொண்டிருந்தாள்.

14 வயதை கடந்தும் சிறுமியை போல இருந்தாள். அவளுக்கு சுரப்பிகள் சரியாக ஹார்மோனை உற்பத்தி செய்யாததால், அவளுக்கு தினமும் ஹார்மோன் ஊசி போட்டு வந்தோம்.

இந்த நிலையில் அவள் திடீரென சிரித்துக்கொண்டும், பாடல் பாடிக்கொண்டும் இருந்தாள். அவளை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்க்குமாறு அவளுடைய வைத்திய ஆலோசகர் கூறியிருந்தார்.அதன்பேரில் நாங்களும் வைத்தியசாலைக்கு சென்றோம். அங்கு ஸ்கேன் செய்வதற்கு முன்பு அவளுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய இதயம், சீரான அளவை தாண்டி அதிகமான முறை துடிக்க ஆர்மபித்தது.உடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தது. உடனே குழந்தைகள் நல வைத்தியசாலைக்கு அலைசாவை கொண்டு சென்றோம். அங்கு அனுமதிக்கப்பட்ட 72 மணிநேரத்தில் அவள் இறந்துவிட்டாள்.பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள், அவளுடைய இதயம் 14 வயது குழந்தையின் இதயத்தை விட வலிமையிழந்து காணப்பட்டதாக கூறினார். அவளுடைய வலது ஆரிக்கிள் பாதிக்கப்பட்டிருந்ததாலே இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சாரா, பெற்றோர்கள் யாரேனும் குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்தால், அதற்கு முன்னதாக அவர்களுடைய இதயம் சீராக உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் கொடுங்கள் என கண்ணீர் மல்கப் தெரிவித்துள்ளார்.