உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சார்ந்தவர் சுதீப். இவர் அமேசான் நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தில் விலையுயர்ந்த தொடுதிரை அலைபேசியை வாங்குவதற்கு பதிவு செய்தார்.
நான்கு நாட்கள் கழித்த பின்னர் அலைபேசியானது வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்., கூறியபடியே 4 நாட்கள் கழித்த பின்னர் அவரின் இல்லத்திற்கு பார்சல் வந்துள்ளது.
அந்த பார்சலை கண்ட அவர் வேகமாக அலைபேசியை எடுக்கும் நோக்கில் அந்த பார்சலை பிரித்தார். அந்த பார்சலை பிரித்த போது அவருக்கு அலைபேசிக்கு பதிலாக சோப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சியும்., மனஉளைச்சலும் அடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி., நிறுவன இயக்குனர் மற்றும் டெலிவரி நபர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விசயத்தை கவனித்த அமேசான் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பணத்தை மீண்டும் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. மேலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும்., இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தது.






