புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கஸ்தூரி என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதான அந்த பெண்ணை, கடந்த 29ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்ததுடன், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணுக்கும் சரக்கு வாகன ஓட்டுநரான நாகராஜ் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
நாகராஜன் அந்த பெண்ணுடன் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாகராஜனை தேடி வந்த காவல்துறையினர் சென்னையில் தலைமறைவாக இருந்த அவரை பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நெருக்கமாக இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக இளம்பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பயத்தில், திடீரென இறந்தவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணும், நாகராஜனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளது.






