கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகள் சரியா?

பெண்ணானவள் குழந்தையை அவளது வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்றால் அவரை வீட்டில் இராணி போலவே., அவர்களின் இல்லத்தில் உள்ளவர்கள் மற்றும் அந்த பெண்ணின் கணவன் வைத்து தங்குவார்…

இந்த காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்த வளையத்திற்குள் வைத்திருக்கின்றனர். அந்த வகையில் அசைவ உணவுகள் ஏதேனும் உட்கொள்ள கூடாது., கோபம் கூடவே கூடாது., எந்த பொருளின் மீதும் அபரீத ஆசையை வைக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த வகையில் கர்ப்ப காலத்தில் தாய்க்கும்., குழந்தைக்கும் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் தேவை., தாயானவள் உண்ணும் உணவிலேயே குழந்தையும் உண்கிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இரும்புசத்து மட்டும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த உறவுகள் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

அதிகளவு காய்கறிகள்., உடலுக்கு வலு சேர்க்கும் பலவகைகள் போன்றவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகளை காட்டிலும் அசைவ உணவுகளில் அதிகளவு இரும்புசத்தும்., கால்சியம் சத்தும் உள்ளது.

மேலும் காய்கறிகள் உண்பதை காட்டிலும்., அசைவ உணவுகள் உண்டு வந்தால் உடலானது அதிகளவு சத்துக்களை உறிஞ்சும். ஆகவே காய்கறிகளுடன் இறைச்சி., முட்டை., மீன் மற்றும் பால் போன்ற பொருட்கள் வழங்கலாம்.