தான் பெற்ற மகளையே இரக்கமின்றி தந்தை செய்த செயல்!

வேறு சாதி இளைஞரை காதலித்ததால் தான் பெற்ற மகளை தந்தை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் நாகிரெட்டிபள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் இளைஞன் சைதன்யா,இவர் அதே பகுதியை சேர்ந்த இந்திரஜா என்ற பெண்ணை கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்திரஜா தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சைதன்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில்இவர்களது காதல் விவகாரம்,இந்திராஜாவின் தந்தைக்கு தெரியவந்தநிலையில், கோபமடைந்த அவர் வேறு சமூகத்தை சேர்ந்த சைதன்யாவை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திரஜா தந்தை பேச்சு கேட்காமல் அவரது காதலை தொடர்ந்தததால் ஆத்திரமடைந்த அவர் இந்திரஜாவை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் உடலை எரித்துள்ளார்.

இதற்கிடையில் இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் இந்திராஜாவின் உறவினர்கள், இந்திரஜா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அனைவரிடமும் கூறி வந்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.