இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு எதுவாக நவம்பர் 5 ஆம் விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடர்ந்து திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வருகிற தீபாவளி பண்டிகைக்காக 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.