இந்திய திரைத்துறையை பொறுத்த வரையில்., தற்போது ஊதாகரமான விசயமாக வெடித்து வருவது #ME TOO எனப்படும் நடிகைகளுக்கான பாலியல் புகாராகும். நடிகைகள் தங்களின் வாழ்கையில், திரையுலக பிரபலங்கள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான தொல்லைகளை தங்களது இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு ஆதரவு தெரிவதும்., எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில்., சென்னையில் நேற்று நடைபெற்ற “எவனும் புத்தனில்லை” திரைப்படத்தின் முதற்பார்வை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது.,
இந்த உலகத்தில் ஆண் மற்றும் பெண்களின் ஈர்ப்பானது இயற்கையான ஒன்றாகும்., மாறாக அந்த ஈர்ப்பு இல்லாதவனென்றால் அவன் மனிதனே இல்லை. அந்த ஈர்ப்புள்ள மனிதன் தனது வரைமுறைக்குள் இருக்க வேண்டும். தனது வரம்பை மீறும் பட்சத்தில் அது தவறு என்று கூறலாம்.
அப்படி இருவரது ஒத்துழைப்பும் இல்லாமல்., தவறுதலான விசயமானது அடக்கும் பட்சத்தில் நிகழ்த்த சம்பவம் குறித்து உடனடியாக கூற வேண்டும்.அப்படி வரைமுறை மீறியோ, ஒருவரை ஒருவர் பிடிக்காமலோ அந்த விஷயம் நடந்தால் அப்பொழுதே சம்பந்தப்பட்டவர் பேச வேண்டும். அவ்வாறு செய்யாமல் தற்போது வந்து கூறுவதால் இந்த சமூகம் திருந்திவிட முடியுமா?
நீதிமன்றமே ஆணும் – ஆணும்., பெண்ணும் – பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதியளித்தது. மேலும் திருமணத்திற்கு பின்னதாக கள்ளக்காதலில் ஒத்துழைப்புடன் ஈடுபடுவது தவறில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் #ME TOO எந்த விதத்தில் தவறாகும் என்று தெரியவில்லை.