சந்தானத்தின் புதிய கெட்டப்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

கடந்த 2016-ஆம் ஆண்டு சந்தானம் – அஞ்சால் சிங் நடித்து வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை ராம்பாலா இயக்கினார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

தில்லுக்கு துட்டு-2 படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக, மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்து வருகிறார். இந்த படம் ஜாலியாகவும் அதே நேரத்தில் காமெடி கலந்த திகில் திரைப்படமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தில்லுக்கு துட்டு-2 படத்தின் முதல் பார்வை ( First Look) நாளை வெளியாகிறது. இந்த செய்தியை நடிகர் சந்தனம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.