அரசியலில் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கடந்த வருடம் டிசம்பர் 31-ந் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகளில் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இதனிடையே தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த 31 டிசம்பர் 2017 ஞாயிற்றுக்கிழமை திடீரென்று அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.
அடுத்த நாளே பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், ரசிகர்களின் உறவினர்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக புதிய இணையதளத்தையும்,மொபைல் ‘ஆப்’பையும் தொடங்கினார். நடிகர் ரஜினி, தனது படத்தின் புரமோஷனுக்காகதான் அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது அறிவித்து வருகிறார் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 15 வருடங்களாக ரஜினி அரசியலுக்குதான் வரப்போவதாக அறிவித்து வருகிறார். ஆனால், இதுவரை கட்சி ஆரம்பித்த மாதிரி தெரியவில்லை.
நம் அன்புத் தலைவரின் அறிக்கை pic.twitter.com/87zcsTkHEQ
— ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram (@rmmoffice) October 23, 2018
இந்நிலையில், நடிகர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ரஜினி மக்கள் மன்றத்தில் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகின்றன; அனுமதியின்றி நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்; வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






